கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?


நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்று அவர் கூறியுள்ளார். நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது; அவரை நான் பார்த்ததே இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

பட்டமளிப்பு விழா மேடையில் செனட் உறுப்பினர்கள் பலர் இருப்பர் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒளிவுமறைவற்ற விசாரணை நடைபெறும் என்றும் வேந்தர் மாநில அரசையோ, அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க அவசியம் இல்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

என் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என ஆளுநர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள கிராமங்களை தெரிந்து கொள்ளவே பயணம் செய்தேன் எனவும் நான் ஆய்வு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *