கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ?


முழு அடைப்பு போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு வரும் கர்நாடக அரசு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று பாமக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக  சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு வரும் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தம். இருமாநில போக்குவரத்து பாதிப்புகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களுரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 50 க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில அரசு பேருந்துகளும் தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர்,  உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில் இன்று போராட்டம் நடைபெறுவதால் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக மாநில அரசுப்பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு  இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதோடு தமிழக – கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனைச்சாவடி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

இதேபோல் சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் தமிழக அரசுப்பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வாகனப்போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *