மோடிக்கு காவி துண்டை போர்த்தி வரவேற்று இருக்கலாம்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் 4-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற உள்ளது.

இதில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்க உள்ளார். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் காவிரி பிரச்சினை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போராட்ட களமாக வெடித்துள்ளது. இது பற்றி பிரதமருக்கு தெரியாமல் இருக்காது. அப்படி இருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிறேன் என்றோ, இரு மாநிலத்துக்கு பாதகம் ஏற்படாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றோ பேச வில்லை.

குறைந்தது காவிரி என்ற வார்த்தையை கூட பிரதமர் பயன்படுத்தாமல் சென்று விட்டது தமிழக மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளது.

பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பொன்னாடை போர்த்தி வரவேற்றதை காட்டிலும் காவி துண்டை போர்த்தி வரவேற்று இருக்கலாம்.

ஏனெனில் தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க. ஆட்சி போலத்தான் உள்ளது. அப்படியென்றால் அவர்களின் தலைவர் வரும் போது காவித்துண்டு போட்டு வரவேற்றால் மோடியும் மன மகிழ்ந்து பாராட்டுவார். இவர்களுக்கு விவசாயிகளைப் பற்றி கவலையில்லை. மக்கள் இவர்களை தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *