தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கறுப்பு கொடியை பார்க்க தைரியமில்லாத கோழை மோடி - வைகோ கடும் தாக்கு

By Admin - April 11th, 2018

Tags : Modi, Vaiko, Category : Tamil News,

தேனி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்றும் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் சாலையில் பயணிக்கும் நெஞ்சுரம் மோடிக்கு இல்லை என்றும் வைகோ கிண்டலடித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ரதமர் மோடியைக் கண்டித்தும் நாளை அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்றும் மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என்றும் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார்.

மோடி வரும் நாளை துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் அனைவரும் கறுப்பு உடை அணியவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மோடியின் பயணத்திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை சாலைகளில் அதிக தூரம் பயணிக்காமல் ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார் மோடி. இந்த நிலையில் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வீராதி வீரர், தீரர் மோடி தமிழக சாலைகளில் பயணிக்க தைரியம் இல்லாதவர் என்றார். சாலையில் போகாமல் மகாபலிபுரத்திற்கும் ஐஐடிக்கும் ஹெலிகாப்டரில் போகிறார்.

உங்களை மாதிரி பயந்தாங்கொள்ளி பிரதமரை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை. வீராதி வீரர் என்று சொல்லும் நீங்க ஒரு கோழை. கறுப்பு கொடியை சந்திக்க நெஞ்சுரமும், தைரியமும் இல்லாதவர். நாங்க என்ன கறுப்பு கொடியை வச்சு சுடவா போறோம். கறுப்புக் கொடிக்கே பயப்படலாமா. முசோலினியாக மாறிய மாறிய மோடி அவரைப் போல தைரியம் இல்லையே. தைரியம் இருந்தா ரோட்ல வாங்க. நெஞ்சுரம் இருக்கிற தைரியமான பிரதமராக இருந்தா சாலையில் வரலாமே. நாளைக்கு பார்க்கலாம் என்று வைகோ கூறியுள்ளார்.

Related Posts

Prime Minister Narendra Modi Happy New Year Greeting cards

Prime Minister Narendra Modi Happy New Year Greeting cards gif flash free download

காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி! ஸ்டாலின் விலாசல்

நாகர்கோவில்: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் மோடி…

டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் : ஜெயக்குமார்

டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பின்னர் அடுத்தவங்களை குறை சொல்ல வேண்டும் எனவும் மீன்வளத்துறை…

நாட்டின் பணக்கார கட்சி பாஜக – ரூ1,034 கோடி சொத்து

கட்சிகளின் வருமானம்:- மொத்தம் – ரூ.1,559.17 கோடி பாஜக – ரூ.1,034.27 கோடி காங்கிரஸ் – ரூ.225.36 கோடி பகுஜன்…

மோடியை அவமானப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்.. தமிழிசை ஆவேசம்

சென்னை: மோடியை அவமானப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?