ராஜினாமா செய்த ஆந்திரா எம்.பி.க்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்களான வரபிரசாத ராவ், ஒய்.வி. சுப்பாரெட்டி, மிதுன் ரெட்டி, ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி, ராஜ்மோகன் ரெட்டி ஆகிய 5 பேர் நேற்று முன்தினம் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

அவர்கள் 5 பேரும் டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப் போவதாகவும் அறிவித்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழை காரணமாக ஆந்திர பவனில் உண்ணாவிரத பந்தல் சரிந்தது.

என்றபோதிலும் அங்குள்ள முற்றத்தில் பந்தல் அமைத்து அவர்கள் திட்டமிட்டவாறு காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.இதையடுத்து, டெல்லி ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று காலை 5 பேரின் உடல் நிலையையும் பரிசோதித்து சீராக இருப்பதாக தெரிவித்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*