பிரபல நடிகருக்கு மிக நெருக்கமாக லிப் லாக் முத்தம் கொடுத்த சமந்தா! ரகசியம் வெளியானது

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அவர் தெலுங்கில் நடித்த Raju Gari Gadhi 2 படம் வெற்றியை தரவில்லை. இதில் அவரின் மாமனார் நாகார்ஜுனாவும் நடித்திருந்தார். ஆனால் அடுத்து திருமணம் முடிந்த அவர் நடித்து வெளியான ரங்கஸ்தலம் அண்மையில் வெளியாகி நல்ல வசூல் செய்தது. அமெரிக்காவிலும் டாப் படங்கள் லிஸ்டில் மூன்றாவது இடம் பிடித்தது. இதில் அவர் விவசாயம் செய்யும் கிராமத்து பெண்ணாக ராம் சரணுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

இதில் அவர் ஓரு காட்சியில் இருவரும் நெருக்கமாக நடித்து லிப் லாக் முத்தம் கொடுப்பது போல இருந்தது. இது குறித்து அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா திருமணமான நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பது கிடையாது. ஆனால் நடிகைகள் என்பதால் இப்படியெல்லாம் எதையாவது கேட்கிறீர்கள்.

படத்தில் ராம் சரண்னின் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். கேமரா போட்டோ டெக்னிக் மூலம் அதை அப்படியே லிப் லாக் முத்தமாக மாற்றிவிட்டார்கள். இது தான் ரகசியம் என பப்ளிக்காக கூறிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *