சீண்டிய சீமான் சீறும் வைகோ!

நாம் தமிழர் கட்சிக்கும், மதிமுகவுக்கும் இடையே தொடர்ந்து ஏற்படும் மோதல்கள் குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து அவர் பேசிய பொது, 8 ஆண்டுகளாக நான் பொறுத்துவிட்டேன், எவ்வளவு தான் அமைதியாய் போவது, என்னை தமிழன் இல்லை என்றும், தெலுங்கன் என்றும், என் சாதியை குறிப்பிட்டும், கீழ்த்தரமாக சீமான் பேசி வருகிறார்.

ஈரோடு ராமசாமி நாயக்கர் பயல் என்றும், கீழ்த்தரமாக பேசி என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டப் பார்க்கிறார் சீமான்.மேலும், அண்ணாதுறை தமிழகத்தை கெடுத்து குட்டிச்செவுறக்கிவிட்டதாக  பெரியாரையும் தாக்கிப் பேசிவருவது என்னை  மறைமுகமாகத் தாக்குவதற்காகவே என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன்.சீமானை சந்திக்க விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வெறும் 8 நிமிடங்கள் தான் அனுமதித்தார்.

புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என்று கருதிக் கொண்டு, அவரோடு பழகியவர் போல பொய் கூறி,  விடுதலைப் புலிகளின் சின்னத்தை தனது கட்சிக் கொடியில் வைத்துக் கொண்டுள்ளார்.நான் ஒரு மாத காலத்துக்கும் மேல், விடுதலைப் புலிகள் இயக்க சீருடை அணிந்து கொண்டு பிரபாகரனுடன் இருந்தவன் என்றும் வைகோ தெரிவித்தார். 

முன்னதாக வைகோ அவர்கள் ”நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களை பாத்து போய் சொல்லுங்கள் உங்கள் சீமானிடம் நாம் எதிர்க்கும் துனிந்தவன் என்று”,  சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமானை வைகோ நார்நாராய் கிழித்து எறிந்தபோது..

https://www.youtube.com/watch?v=nCRvDeckrHY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *