கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?


சாதீய ரீதியாகச் செயல்படுகிறதா தென்மாவட்ட காவல்துறை – பொதுமக்கள் அச்சம்.

தொடர்ந்து, தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சமூகப் பெரியவர்கள் மீது, உண்மைக்குப் புறம்பாக, பொய் வழக்குகளை சுமத்தி, விசாரணை என்ற பெயரில், கடுமையாகத் தாக்கி, கை கால்களை முறித்து, நிரந்த ஊனமாக்கும் செயல் காவல்துறையில் தொடர்கிறது. போலிசாரைத்  தாக்கினார்கள் என்று போலியாகக் குற்றம் சாட்டி, என்கவுன்டர் என்ற போர்வையில் படுகொலைகளும் நடப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

கோவில்பட்டியில், காவல்துறையினரால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது திட்டமிட்டே ஏவப்படும் வன்முறையால் பாதிக்கப்பட்ட சமூக மக்கள், செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த காவல்துறை, அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களை, வழக்கம் போல் கைது செய்து தாக்கியுள்ளது. அந்த வீடியோ, சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.  குறிப்பாக, மாமன்னர் மக்கள் இயக்கத்தின் தலைவர் செல்வம் என்பவரை, போலீசார் கடுமையாகத் தாக்கியதின் விளைவாக, அவர் சுய நினைவின்றி, தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.  

இன்றைய பேரணியில் சிறப்புரையாற்ற,  கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.பி. உதயகுமார் வருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தக் கொடூரமான தாக்குதல், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று சாதியரீதியாக செயல்படும் போக்கு,  காவல்துறையில் அதிகரித்து வருவதால், பல அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இது போன்று சாதியரீதியாக செயல்படும் காவல்துறையினரை, உடனடியாகப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *