கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?


தமிழகத்தில் போராட்டம் நீடிப்புநடிகர்-நடிகைகளும் களத்தில் குதிக்கிறார்கள்

சென்னை,
ஆளும் கட்சியான அ.தி. மு.க. சார்பில் கடந்த 3-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.
அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவர்கள் என பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் நீடித்தன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை நகரில் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர் கள் கைது செய்யப்பட்டனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு பூட்டுப்போட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். போராட்டங்களில் ஈடுபட்டதாக சென்னையில் நேற்று 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தஞ்சை இர்வின் பாலம் அருகே நேற்று திரண்டு, கல்லணை கால்வாய் எனப்படும் புது ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்துக்கு பூட்டுப்போட வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் த.மா.கா. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சென்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 20 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

நாமக்கல்லில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த 121 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 235 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள். இதற்காக அங்கு பந்தல் மற்றும் மேடை அமைக்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *