ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

சென்னை,தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் நேற்றுடன் 48வது நாளை அடைந்தது.  அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியும், வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடியும் இந்த  போராட்டம் நடந்தது.  தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*