சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால்… வேல்முருகன் எச்சரிக்கை!

இரண்டு ஆண்டுகாலம் சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்படாமல் இருந்தது. அதனால் என்ன குடி முழுகி விட்டது? கிரிக்கெட் ரசிகர்கள் மீது பழியை போட்டு, ’ரசிகர்கள் வருகிறார்கள், நாங்கள் நடத்துகிறோம்’ என்று சொல்வது ஏமாற்று வேலை, மோசடி வேலை. தமிழனை மிகப்பெரிய அளவில் வஞ்சிக்கின்ற, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலை. இதை திட்டமிட்டு ஐபிஎல் நிர்வாகம் செய்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நீங்கள் ஒருநாள் வேண்டுமானால் காவல்துறை உதவியோடு போட்டியை நடத்திவிடலாம். இந்தப் போட்டி எங்கள் வேண்டுகளை மீறி தொடர்ந்து நடந்தது என்றால் இதை நிறுத்த மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்துவோம்.

தமிழக இளைஞர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் ஓட்டலை விட்டு வேறு எங்கும் சென்றாலோ, சினிமா வுக்கு சென்றாலோ, அவர்களுக்கு ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டால், அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. தமிழக வாழ்வுரி மை கட்சிக்கோ, வேல்முருகனுக்கோ, போராடுகிற வேறு எந்த போராட்ட அமைப்புக்கோ தொடர்பு இல்லை. அது உரிமைப் போருக்கான எதிர்வினையாக இருக்கும்.

எவ்வளவு அகம்பாவம் இருந்தால் ஆணவம் இருந்தால் தமிழ்நாடு எழுச்சியோடு நின்றுகொண்டிருக்கும்போது போலீஸ் பாது காப்போடு கிரிக்கெட் போட்டியை நடத்தியே தீருவோம் என்று சொல்கிறீர்கள்? தமிழ்நாட்டில் போட்டி ஒரு நாளில் முடிந்து விடும். ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினரே, நீங்கள்தான் இங்குதான் இருக்க வேண்டும். உங்களுக்கு எதிராக ஜனநா யக போராட்டம் தினம் தினம் நடக்கும். நீங்கள் செய்திருக்கிற ஊழலை வெளிப்படுத்தும் வகையில் எங்கள் போராட்டம் வேறு வகையில் தொடங்கும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *