பிரபுதேவாவை விட நடனத்தில் விஜய் தான் பெஸ்ட்- புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்

தமிழ் சினிமாவில் நடனத்துக்கு பெயர் போன நடிகர்களில் பிரபுதேவாவை அடுத்து விஜய்யை தான் அனைவரும் கூறுவர். அவருடைய நடனத்திற்கு தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது விஜய்யை பற்றி பிரபல கிரிக்கெட் வீரரும், நடிகருமான சடகோபன் ரமேஷ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது அவர், இளைய தளபதி விஜய்யின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும், இந்தியாவில் மிகச் சிறந்த நடனம் ஆடக் கூடியவர். உண்மையாக சொல்ல வேண்டுமானால் பிரபுதேவா நடனத்தை விட நான் விஜய் அவர்களின் நடனத்தை ரசித்துள்ளேன்.

சிரிப்புடன் எவ்வளவு கஷ்டமான நடன அமைப்பாக இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் சாதாரணமாக ஆடுவார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *