கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அடித்தால் அழுவான் , பிட்டால் சிரிப்பான்?


ஐ.டி வேலை நரகமா? சொர்க்கமா?

முதல் இடி ! என்னாது ஐ.டி பொண்ணா ? வேண்டவே வேணாம்!

நல்ல பிள்ளைகளாய் பெற்றோர் பார்க்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஹை-டெக் பசங்க சொல்லும் ட்ரெண்டிங் கண்டிஷன் ‘எந்த பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை, ஆனா ஐடி பொண்ணு மட்டும் வேண்டாம்’ என்பதுதான் அது. அது ஏன் ஐடி பொண்ணு மட்டும் வேணாம்? தனக்கு சமமான சம்பாத்தியம் தலையாட்டி பொம்மையாய் இல்லாமல் சுயமாய் முடிவெடுப்பது என்பதுதான் நிஜமான காரணம். ஆனால் வீட்டில் சொல்வது என்னவோஇ ‘ஐடி போனாலே திமிர் வந்திரும் நல்லா ஊர் சுத்துவா(ளு)ங்க கண்ணா பின்னான்னு செலவு பண்ணுவாங்க, பாய் பிரண்ட் கண்டிப்பா இருக்கும் இன்னும் சில பொண்ணுங்க தண்ணி கூட அடிப்பாங்க!’ இதுதான் பொதுவான மக்களின் மனோ நிலையாய் இருக்கிறது. 

மேலே சொல்லப்பட்ட 10  செகண்ட் கதை சிறுகதையாகி 3 மணி நேர திரைப்படமாகி கடைசியில் தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளிடம் ‘குற்றம் – நடந்தது என்ன’ என்ற அளவுக்கு விசாரணை வரும். உங்கள் உறவிலும் ஐடியில் வேலை செய்யும், வேலை செய்ய ஆசைப்படும் பெண்கள் இருக்காங்க ப்ரோ! கொஞ்சம் பார்த்து (கதை) பேசுங்க!

சீன் தாங்கல!

பொதுவாக இந்த கமெண்ட் கிராமப்புற பெண்கள் மீது விழும். கல்லூரியில் எண்ணெய் வைத்து படிய தலை வாரியிருந்தால் இங்கு வந்தும் அப்படி தான் இருக்க வேண்டுமா என்ன? மனதளவிலும் வெளித்தோற்ற அளவிலும் தன்னை தனக்கு பிடித்தவாறு மெருகேற்றிக்கொள்ளும் பெண்களுக்கு கிடைக்கும் கமெண்டுகள் ‘பட்டிக்காட்டிலிருந்து வந்துட்டு சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த மாதிரி சீனப் பாரேன்’.

 

ஐ.டி ஹாஸ்டல் பரிதாபங்கள்

சராசரி சம்பளம் மாதம் 15000 ரூபாயுடன் படிப்பிற்காக வங்கியில் வாங்கிய கடனுடன் அக்கம்பக்கத்தில் வாங்கிய கடனையும் கட்ட வேண்டிய வைராக்யத்துடனும் வீட்டின் பழைய பொருட்களை புதிதாக மாற்ற வேண்டிய ஆசையுடனும் ஆயிரம் கனவுகளுடனும் முன் பின் தெரியாத நகரத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சமாளிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனைஇ தங்கும் விடுதிகள் தான். மாதம் 5000 ரூபாய்க்கு ஏதோ ஒரு குறுக்கு சத்துக்களின் மூலையில்இ பிடிக்காத உணவுடனும் பிடித்த தோழிகளுடனும் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை. இரவு 8 மணிக்கு அலுவலகம் முடிந்து ஹாஸ்டலுக்கு செல்வதற்குள் போதுமடா சாமி என்றிருக்கும். நெரிசல் மிகுந்த பேருந்துஃரயில் பயணங்கள் இவ்வளவும் கடந்து வீட்டுக்கு போனில் பேசுகையில் கிடைக்கும் தானாக ஒட்டிக்கொண்ட உற்சாகம் – இது தான் இங்குள்ள பெண்களின் நிஜமான வாழ்க்கை. பாதி நாட்களில் விடுதியில் தரும் வெள்ளை சாதத்துடன் 10  ருபாய் தயிர் பாக்கெட்டை வெறுப்பு உணவை விருப்ப உணவாக்கிக்கொண்டு அவ்வப்போது ஷாப்பிங் மால் படம் கடற்கரை என்று வாழ்க்கையை அழகாகிக்கொள்வதிலும் சளைத்தவர்கள் அல்ல ஐ.டி. பெண்கள் !

பணிச்சுமை – இருக்கு ஆனா இல்லை!

எசிரூம்-இல் உட்கார்ந்துட்டே வேலை பாக்கிறது கஷ்டமா என்ன ? எல்லாரும் கேட்கின்ற கேள்வி தான். மூணு மணி நேரம் சினிமா தியேட்டர் போய்ட்டு படம் பிடிக்கலைன்னா அந்த நேரத்தை சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கும்? முதுகுவலியிலிருந்து தலை வலி வரை எல்லா வலியும் வந்து இம்சை செய்யும். ஒரு நாள் முழுக்க 9 – 11 மணி நேரம் அதே இருக்கையில் அமர்ந்தே இருந்தால் பிடிச்ச படம் கூட பிடிக்காம போய்டும். அதே மாதிரி தான் இந்த வாழ்க்கையும்! காலையில் 10 மணிக்கு கணினி முன் அமர்ந்தால் குவிந்து கிடைக்கும் மின்னஞ்சல்களை வேண்டியது வேண்டாதது கடுப்பேற்றுவது குப்பைத்தொட்டியில் போடுவது என்று தரம் பிடித்து பதிலளிக்கவே சில மணி நேரங்கள் ஓடி விடும். பிறகுஇ நமக்காகவே காத்திருக்கும் வேலைக்குள் புக நினைத்தால், எப்போதோ எங்கோ விட்டுப்போன ஒரு புள்ளியால் (ஒரே ஒரு புள்ளி) பிரச்னை வந்து நிற்கும். அது எப்போ எதுக்காக யாரால பண்ணதுன்னு அலசி ஆராய்ந்து என்னால் பிரச்னை இல்லை-னு நேக்கா சமாளிச்சு ஒரு பெரு மூச்சு விட்டா அடுத்த பிரச்சனை தயாரா இருக்கும். இதுக்கும் நடுவுல பசிக்கு சாப்பிட்டு தலை வலிக்கு டீ குடிச்சு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு இன்னிக்கு செஞ்ச வேலையையும் நாளைக்கு செய்ய போற வேலையையும் வெளிநாட்ல இருக்கிற மேனேஜர்-கு புரிய வச்சு  சமாளிக்கவே சாயந்திரம் 6 மணி ஆகிவிடும். இந்த கலவரத்துல அன்னிக்கு செய்யற வேலை அப்படியே இருக்கும். அத ஆரம்பிச்ச முடிக்கவே இரவு 9 – 10 மணி ஆகுமே! ஆனா கம்பெனி ரூல்ஸ் படி 8 மணிக்கு மேல பொண்ணுங்க இருக்க கூடாதே. அதுக்கு காரணம் சொல்லி மேனேஜர் டீம் லீடரிடம் அனுமதி வாங்கி வேலைய முடிச்சுட்டு ஆபீஸ் வண்டி-க்கு காத்திருக்கணும் (கம்பெனி ரூல்ஸ் அப்படி). 8 ருபாய் குடுத்து பஸ்ல போன 20 நிமிஷத்துல போயிருக்க வேண்டிய இடத்துக்கு,  2 மணி நேரம் ஊரையே சுத்தி காட்டிட்டு எல்லாரையும் இறக்கி விட்டுட்டு நம்மள கடைசியா கொண்டு போய் விடுவாங்க (கம்பெனி ரூல்ஸ்).  இரவு எத்தனை மணிக்கு வந்தாலும் காலையில் அவங்க எதிர் பார்த்த நேரத்துல அங்க இருக்கணும். இல்லையென்றால் மறைமுக ஏச்சுகளுக்கும் பஞ்சமில்லை. மற்றொரு நாள் அவசரத்துக்கு லீவு கேக்கும் போது லேட்டா வந்ததெல்லாம் கிரைம் லிஸ்ட் – ல இருக்கும்இ எதுக்கு வம்பு? இப்ப நாம ஆபீஸ் ல வேலைஇ டென்ஷன் லாம் இருக்க இல்லையா? 

லீவு-க்கு ஊருக்கு போகணுமே!

சனி, ஞாயிறு விடுமுறைக்கு ஊருக்கு போவதே ஒரு பெரிய போராட்டம் தான். அதுவும் விசேஷம் பண்டிகை என்றால் அவ்வளவு தான். அடிச்சு பிடிச்சு டிக்கெட் முன் பதிவு செய்துஇ தி.நகரில் ஒரு ரவுண்டு அடிச்சது வீட்டில் அனைவருக்கும் பிடிச்சதை வாங்கிட்டு கோயம்பேடு தாம்பரம் சென்ட்ரல்னு கூட்டத்தில் மிதந்து நீந்தி ஒரு வழியாக ஊரு போய் சேரதுல தான் இருக்கு நிஜ சந்தோசம்!

கடைசியா என்ன சொல்ல வரேன்னா..

பெண்களுக்கு சம உரிமையும் திறமைக்கு ஏற்ப உயரமும் கிடைப்பதனால் இந்தத் துறையும் சிறப்பானது என்பதில் சந்தேகம் இல்லை. எல்லா வேலையும் போல தகவல் தொழில் நுட்பத்துறையிலும் சிக்கல்கள் மனஅழுத்தம் சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுவும் அமர்ந்தே இருப்பதாலும் முறையான உடற்பயிற்சிகள் இல்லாததாலும் உடல்ரீதியிலான பல பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது. கண் எரிச்சல், தலைவலி, முதுகு, இடுப்பு வலி, தைராய்டு இன்னும் எக்க சக்கம். திருமணமான பெண்களுக்கு வீட்டை நிர்வகிக்கும் பொறுப்புகளும் சேர்வதால் மன உளைச்சல் அதிகம் தான் சேரும். சரியான முறையில் வேலையையும், வாழ்க்கையையும் சமன் செய்வதில் தான் இருக்கிறது சந்தோஷத்தின் சூட்சுமம்.

Tags:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *