கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ?


காங். எம்எல்ஏவிடம் பாஜக பேரம் பேசும் ஆடியோ போலியானது – காங்கிரஸ் எம்எல்ஏ

பெங்களூரு:கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர், 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தும் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.ராய்ச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பாஜகவை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது. அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், பணம், மந்திரி பதவி மற்றும் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்திக்க வைப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என பாஜக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்தார். 

அந்த ஆடியோ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாள் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தநாள் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் நேற்று தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் கட்சி தன்னை பற்றி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது என தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:தன்னையும், தனது மனைவியையும் பாஜகவினர் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்மனைவியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பாஜகவினர் பேசியதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது.

அதுபோன்ற எந்தவிதமான தொலைபேசி அழைப்புகளையும் என் மனைவி எதிர்கொள்ளவில்லை. அந்த ஆடியோ டேப்பில் உள்ள பெண்ணின் குரலும் என் மனைவி உடையது அல்ல. இதுபோன்ற ஆடியோ டேப்பை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

அவரது இந்த பதிவு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KarnataElection2018 #Congress #AudioRelease #ShivaramHebbar

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *