தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு

By Admin - May 25th, 2018

Tags : Police firing, Sterlite Copper, Thoothukudi, Category : Tamil News,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் படை வர வழைக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ரோந்து வந்து கண்காணித்தனர்.

தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது. தற்போது அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு இன்று ஒரளவு அமைதி திரும்பி உள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

தூத்துக்குடியில் மட்டும் இன்னும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் ஒரு அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு தப்பியோடினர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings

Related Posts

தமிழிசை பெயரைச் சொன்னாலே சுகமாக இருக்கும்: என்ன சொல்ல வருகிறார் நடிகர் கார்த்திக்..?

தான் அதிமுக கூட்டணியில் இணைந்துவிடக் கூடாது என பெரிய கும்பலே சதி செய்தது, தமிழகத்தை தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்…

”சோபியா விவகாரம்” வழக்கை திரும்ப பெறமாட்டேன்., தமிழிசை பரபரப்பு பேட்டி.!!

நேற்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மருத்துவ மாணவி சோபியா கோஷமிட்டதால் போலீசார் அவரை கைது…

புத்தாண்டில் ஸ்டொ்லைட் ஆலை திறக்கப்படுவது உறுதி – ராமதாஸ் ட்வீட்

ஸ்டொ்லைட் ஆலையை மூடியது தவறு என்று ஆய்வுக்குழு அறிக்கை சமா்ப்பித்துள்ள நிலையில், புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி என்று பா.ம.க….

ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி வங்கியின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.7…

நான் ஏன் முதல்வராக வரக்கூடாது: சரத் குமார் ஏக்கம்!

வரும் 2021 தமிழகச் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிடும் என…




அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share