தனுஷ் பட நடிகைக்கு கால் டாக்சியில் நடந்த மோசமான அனுபவம்!

தனுஷ் நடித்த ட்ரீம்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை பாருல் யாதவ். பின் நடிகர் பிரசாந்தின் புலன் விசாரணை 2 படத்திலும் நடித்திருந்தார். பல கன்னட மொழி படங்களில் நடித்து வந்த இவர் நிறைய ஹிந்தி சானல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
அவர் அண்மையில் பெங்களூரில் விமான நிலையத்திற்கு ஓலா டாக்சியில் சென்றுள்ளார். அங்கு காரை சிறிது நேரம் நிறுத்திவிட்டு பின் மீண்டும் வந்துள்ளார். அப்போது அவர் காருக்குள் வைத்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்த பெட்டியை காணவில்லையாம். டிரைவரிடம் கேட்டும் அவர் எனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டாராம்.

இதனால் சந்தேகமான அவர் போலிசில் புகார் அளித்துள்ளார். விசாரணைக்கு பின் அந்த ஓட்டுனரிடம் இருந்து காணாமல் போன பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதனால் கடுப்பான பாருல் யாரும் அந்த கம்பெனி டேக்சியை நம்பவேண்டாம் என கூறியுள்ளாராம்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *