தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ரஜினியை நோக்கிப் பாயும் சுளீர் கேள்விகள்.. பதில் சொல்வாரா?

By Admin - May 31st, 2018

Tags : Rajinikanth, Sterlite protest, Category : Tamil News,

சென்னை: போராட்டங்களால் நாடு சுடுகாடாகி விடும் என்று கூறும் ரஜினிகாந்த், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் நகரங்கள் சுடுகாடாகி வருகிறதே இதற்கு என்ன பதில் சொல்வார் என்று காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி கேட்டுள்ளார்.

நடிகர் ரஜினியின் பொத்தாம் பொதுவான பேச்சால் மக்கள் கடும் எரிச்சலைடந்துள்ளனர். அரசியல் கட்சிகள், பொதுமக்கள், போராட்டக்களங்களில் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கோபத்தையும் ஒரு சேர வாங்கிக் கொண்டுள்ளார் ரஜினி.

இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி ரஜினி பேச்சு குறித்து தனது கருத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார். போராட்டத்தால் ஒரு ஸ்டெர்லைட் மூடப்பட்டு நாடு சுடுகாடாகிவிடும் என்றால் கரூர், திருப்பூர் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் நகரங்கள் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, அரசின் அலட்சியத்தால் சுடுகாடாகி வருகிறதே இது பற்றியெல்லாம் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா ரஜினி?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பிஜேபியும், இப்போது ரஜினியும் ஒன்றுபோல சமூக விரோதிகள் பற்றிப் பேசுகிறார்கள். தெரியுமென்றால் அவர்களை அடையாளம் காட்டவேண்டியது தானே?

போராட்டத்தை எதற்கு கொச்சைப்படுத்த வேண்டும்?படுகொலை செய்யப்பட்ட 13 பேரும் 17வயது மாணவி உட்பட சமூக விரோதிகளா?

போராட்டத்தால் ஒரு சமூகம் சுடுகாடாகுமென்றால் பிறகு எதற்காக திரைப்படங்களில் போர்க்கோலம் போடுகிறீர்கள்?

புரட்சி பற்றிப் பேசுகிறீர்கள்? இந்திய சுதந்திரப் போராட்டம் 300 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதனால் தான் சுடுகாடாகிவிடாமல் இந்த மண் இன்னும் உயிர்த்திருக்கிறது.அப்பொழுதும் உங்களைப் போன்ற அதிகாரத்தின் ஏவலாள்கள் உங்கள் குருநாதர்கள் ( ஆர் எஸ் எஸ்!) இதேபோல் தான் பேசிவந்தார்கள்.

ஏன் சுதந்திரப்போராளிகளை காட்டிக் கூட கொடுத்தார்கள். ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அடிமை தேசத்தில் போராளிகள் உயிர்த்தெழுந்த வரலாறு நம்முடையது. சுதந்திர மண்ணில் மக்களை அடிமைகளாக இருக்கச் சொல்லாதீர்கள். அதுதான் ஒரு தேசத்தை சுடுகாடாக்கிவிடும். போராட்டங்கள் அல்ல என்று கூறியுள்ளார் ஜோதிமணி.

Related Posts

Rajinikanth will meet & have lunch with Najib Razak Malaysian Prime Minister

Rajinikanth will meet & have lunch with NajibRazak Malaysian Prime Minister Natchathira Vizha 2018 Rajinikanthpoliticalentry

ரஜினி என்னும் மண் குதிரையை பொன் குதிரை என்று பாஜக நினைக்கிறது!

தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளருமான…

ரஜினிக்காக திருவாரூர் தேர்தல் ரத்து!

அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் ரஜினிகாந்த் பொங்கலுக்கு அப்புறம் கட்சி பெயரை அறிவிக்க இருப்பதால் , ரஜினியுடன் சேர்ந்து பிஜேபி…

ரஜினியை பற்றி ஒன்னே ஒன்னு தான்…..: கார்த்திக் சுப்புராஜ்!

பேட்ட திரைப்படத்தின் வெற்றி மற்றும் பெண்கள் , குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து செல்வது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளதாக…

ஸ்டெர்லைட் எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி டிடிவி தினகரன் கண்டன பொதுக்கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share