ரஜினியின் காலா படத்தை வாங்கிய சர்ச்சை பைனான்சியர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் மே 7ம் தேதி திரைக்கு வருகிறது. பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினி மும்பை டானாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை வாங்கி வெளியிடும் லைகா நிறுவனம் தற்போது பகுதி வாரியாக வியாபாரத்தை துவக்கியுள்ளது.

சென்னை சிட்டி உரிமையை SPI சினிமாஸ் பெற்றுள்ளது, மேலும் சேலம் ரிலீஸ் உரிமையை 7ஜி சிவாவிற்க்கும் மினிமம் கேரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ராம்நாடு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் பைனான்சியர் அன்பு செழியன் சில மாதங்கள் முன்பு நடிகர் சசிகுமார் மைத்துனர் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என குற்றச்சாட்டு எழுந்து பெரிய சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

We have sold #MaduraiRamnad #MRArea rights of #Kaala to the most renowned distributor -#GopuramFilms 😊🔥#SemmaWeightu #MakeWayForTheKing #KaalaOnJune7th @wunderbarfilms @vinod_offl pic. twitter. com/o7yQdUSBhS— Lyca Productions (@LycaProductions) May 26, 2018


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *