நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு

இந்நிலையில் நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் 16 ம் தேதி கைது செய்யப்பட்டார். கைதான நிர்மலா தேவி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது நீதின்றக் காவல் முடிந்து இன்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் வரும் ஜுன் 6ம் தேதி வரை அதாவது மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.