ரஜினிகாந்த் மீது தேச துரோக வழக்கு – சரத்குமார்

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். அப்போதுபேசிய ரஜினிகாந்த், மக்கள் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் ஏற்பட்டது என்று கூறினார். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டதாகவும், சமூக விரோதிகளை ஜெயலலிதா ஆட்சியின்போது எப்படி ஒடுக்கப்பட்டு வைத்திருந்தார்களோ அதேபோன்று இந்த அரசும் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். இது குறித்து சென்னை விமான நிலையத்தில்   நடிகரும்,சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்,கூறியதாவது:-தமிழகம் போராட்டக்களமாக மாறி சுடுகாடாகமாறிவிடும் என்கிறார் ரஜினி. அப்படி என்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று கூறுகிறாரா? அல்லது மக்கள் போராட உரிமை இல்லை என்று ரஜினி கூறுகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

மக்களுக்கு போராட உரிமை இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை, போராட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரச்சினையைச் சரி செய்வதைவிட்டுவிட்டு மக்களைக் கட்டுப்படுத்த முயலக் கூடாது. ரஜினியின் பேச்சு மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது உடனடியாக தேசத்துரோக வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என கூறினார்.

பின்னர் தூத்துக்குடி சென்ற சரத்குமார்  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கபடும் என அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *