தமிழர்களுக்கு பிடித்த ஒரே ஒரு இந்திய தலைவன்..!!

சுபாஷ் சந்திரபோஸின் குருவான, ராஷ் பீகாரி கோஷ்..!சுபாஷ் சந்திரபோஸ், சுதந்திர போராட்டத்திற்காக, நமது இந்தியா்களைப் படையினராகத் திரட்டி, சிங்கப்பூரிலிருந்து ஐ.என்.ஏ. படையினை நிறுவினார். இந்த ஐ.என்.ஏ. அமைப்பு, தோன்றுவதற்கு முன்பாக, ஜப்பானில் இருந்த, “ஆசாத் ஹிந்த்” என்ற அமைப்பிற்கு, தலைவராக விளங்கியவர், ராஷ் பீஹாரி போஸ். 

ஜப்பானில் இருந்து கொண்டு, இந்திய சுதந்திரப் போராளிகளை ஒருங்கிணைத்து, இந்திய தேசிய ராணுவமாகக் கொண்டு செல்ல விரும்பினார், போஸ். பின் அந்த அமைப்பை, சுபாஷ் சந்திரபோசிடம் ஒப்படைத்தார். அந்த அமைப்பு தான், பின்னாளில் ஐ.என்.ஏ. என்று மாறியது.நாடு கடந்தாலும், நம் நாட்டுப்பற்று தான், இறுதி வரை அவரைப் பேச வைத்தது.

1886 –ஆம் ஆண்டு, மே 25-ஆம் தேதி, மேற்கு வங்காளத்தில் உள்ள, சுபால்டாகா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது இளமைப் பருவம் முழுவதும், இந்தக் கிராமத்திலேயே கழிந்தது.சிறு வயதில், ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு செய்து வந்த கொடுமைகளைத் தனது தாத்தாக சொல்லக் கதையாகக் கேட்டிருக்கிறார். அதுவே, அவர் மனதில், தேசப் பற்றினை வளர்க்க காரணமாக இருந்தது.பின் 1908 –ஆம் ஆண்டு, டெராடூனில் உள்ள, வன ஆராய்ச்சி நிறுவனத்தில், குமாஸ்தாவாகப் பணியாற்றினார்.

அப்போது, இடையிடையே, சுதந்திரப் பேராளிகளுடன் ஏற்பட்ட நட்பால், அடிக்கடி, நடைபெறும் அதிரடி சம்பவங்களுக்குள், தன்னை சம்பந்தப் படுத்திக் கொண்டார்.ராஷ் பீஹாரி போஸின் எண்ணம், தீவிரவாதமாக இருக்கவில்லை. மாறாக, இந்தியாவில், ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு ஸ்திரமான ராணுவத்தை உருவாக்க வேண்டும். அந்த ராணுவத்தின் உதவி கொண்டு, ஆங்கிலேயரிடம் போராடி வென்று, தாய் நாட்டை மீட்க வேண்டும், என்பது தான் அவரது கொள்கையாக இருந்தது.ஆனால், விதி வேறு மாதிரி அவரை வழி நடத்தியது. அதனால், வங்காளத்தில் உள்ள ஹுக்ளி மாவட்டத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது, ஆர்ய சமாஜ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.அங்கிருந்த போது, “லார்டு ஹார்டின்ஜ்” என்ற ஆங்கிலேயரைச் சுட்டுக் கொல்வதற்காக, இவர் சொல்லிச் சென்றனர் போராளிகள்.

1912 டிசம்பர் 12-ஆம் தேதி, ஹார்டின்ஜ் டெல்லி தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைப் பார்த்து விட்டுத் திரும்புகிற தருணத்தில், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர்.ஆனால், சில துரோகிகள், இந்த செய்தியை, ஆங்கிலேயரின் கைக்கூலிப் பணத்திற்கு ஆசைப்பட்டு, சொல்லி விட்டனர். எனவே, அந்தப் போராளிகள் திட்டமிட்ட, இந்தப் படுகொலை தவிர்க்கப் பட்டது. இதனால், பீஹாரி போஸ், ஆங்கிலேயரால் தேடப்படும் குற்றவாளி ஆனார்.1915-ஆம் ஆண்டு, உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், கல்கத்தாவில் அனுசீலன் சமதி என்ற புரட்சிப் படையின் தலைவராக இருந்த இவர், பட்டாளத்திற்குள் புரட்சியை ஏற்படுத்தி, மீண்டும் ஒரு சிப்பாய் கலகத்தை உருவாக்க நினைத்தார். ஆனால், அதுவும் சில துரோகிகளால், நடைபெற இயலாமல் போனது.இதனால், பீஹாரி போஸ் தப்பிச் சென்று ஜப்பான் சென்றார். பின் தன்னை ஜப்பான்வாசியாக மாற்றிக் கொண்டு, அங்கே ஒரு ஜப்பானியப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். 1923-ஆம் ஆண்டு, ஜப்பான் குடியுரிமை பெற்றார்.பின் அங்கிருந்தபடியே, ஆசாத் ஹிந்த், என்ற அமைப்பைத் துவக்கி, ஜப்பானில் உள்ள இந்தியர்களைத் திரட்டி, அதற்கு ஆதரவு தரச் செய்தார். எழுத்தாளராகத் தனது பணியை ஜப்பானில் தொடர்ந்தார். ஆசாத் இந்து அமைப்பின் கொடியை அவர் அறிமுகம் செய்த போது, சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானில் தான் இருந்தார்.

1942-ஆம் ஆண்டு, இவர் உடல் நலமில்லாமல் இருந்த காரணத்தால், அந்தப் பணியை சுபாஷிடம் ஒப்படைத்தார். 1945 – ஜனவரி 21-ஆம் தேதி, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் மரணம் அடைந்தார்.தான் இறப்பதற்குள், இந்தியாவின் விடுதலையைக் காண வேண்டும், என்று விரும்பியவரின் கனவு, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், இவர் ஆன்மாவின் விருப்பம் போல விடுதலை ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *