தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

By Admin - May 11th, 2018

Tags : Nirmala Devi, Category : Tamil News,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தபின் சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட்டு கீதா, நிர்மலாதேவியை நேற்று (மே 9) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நிர்மலாதேவியின் காவல் முடிவடைந்ததையொட்டி, நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசாரால் வேனில் கொண்டுவரப்பட்டு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கமான கோர்ட்டு நடைமுறைக்கு பின்னர் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, நிர்மலாதேவியை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதன் பேரில் போலீசார் அவரை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.இந்த நிலையில் நிர்மலாதேவியின் சார்பில்  ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில்  ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டது. இதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

முருகன் மற்றும்  கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 18 ந்தேதிக்கு தள்ளி வைக்கப்ப்பட்டு உள்ளது.

Related Posts

நிர்மலாதேவி விவகாரம்: பல்கலை. மாணவிகள், முன்னாள் பதிவாளரிடம் சிபிசிஐடி விசாரணை

மதுரை: பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக பல்கலை மாணவர்கள் மற்றும் முன்னாள் பதிவாளர் விஜயன் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று…

வீட்டை பூட்டிக் கொண்டு கதவை திறக்காமல் அடம்பிடிக்கும் பேராசிரியர் நிர்மலா தேவி

அருப்புக்கோட்டை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவியின் வீட்டுக்கு போலீஸார் சென்ற நிலையில் அவர் வீட்டுக்குள்ளேயே…

நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்? விரைவில் விசாரணை

விருதுநகர்:அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில்…

நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்று அவர் கூறியுள்ளார். நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது; அவரை நான்…

நிர்மலாதேவி விவகாரத்தில் களத்தில் குதித்த மாதர் சங்கம்..!!

நிர்மலாதேவி விவகாரத்தில், உச்ச நீதி மன்றம் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்…. ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்….நிர்மலாதேவி விவகாரத்தில், ஓய்வு…




அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share