கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?


அஜித்திற்கு இங்கு இருக்கும் இடம் தெரியவில்லையா?- தாக்கிய பிரபலம்

பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி தமிழ் சினிமாவில் நடக்கும் சில விஷயங்களை பற்றி பேச சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசும்போது, சில படங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கப்படும் போது எங்களின் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. காலா படத்தை இங்கு படப்பிடிப்பு செய்தார்கள். ரூ. 12 கோடி மதிப்புள்ள செட்டில் படப்பிடிப்பு செய்யும்போது 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.

சினிமாக்காரர்களுக்கு மட்டும் அல்ல அப்பகுதி மக்களுக்கே 6 மாதத்திற்கான வேலை வாய்ப்பை அந்த படம் ஏற்படுத்திக் கொடுத்தது. அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வேறொரு இடத்தில் நடக்கியது. முன்பெல்லாம் படப்பிடிப்பு வெளியிடங்களில் நடப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. சில பேரோட வசதிக்காக வேறு மாநிலத்தில் போய் செட் போட்டுள்ளார்கள்.

அதை நம் மாநிலத்திலேயே செய்யலாமே. இதனால் இங்குள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இல்லாத இடமா அங்கு இருக்கிறது. இனிமேல் தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள், நம் மாநில தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை அழித்துவிடாதீர்கள் என்று பேசியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *