கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?


ஒரே நாளில் குப்புற விழுந்த ரஜினி! பகிரங்க மன்னிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 14 பேர் படுகொலை செய்யபட்டனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களையும், இறந்தவர்களின் குடும்பக்களுக்கு ஆறுதல் சொல்லவும் பலரும் தூத்துக்குடி நோக்கி படை எடுத்துள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த தூத்துக்குடி சென்று காயம்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”பொதுமக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் பெருகி விட்டனர். தமிழக அரசு இவர்களை அடக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார், இந்த சமூக விரோதிகளை அடைக்க விடில் தமிழகம் தாங்காது”. என தெரிவித்தார்.

பின்னர், தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இறங்கியவுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள்தான் காரணம். பிரச்சனை உண்டாக்கியதே சமூக விரோதிகள் தான், காவல்துறையினரை சமூகவிரோதிகள் தான் முதலில் தாக்குதல் நடத்தினர்.

சமூக விரோதிகள் தான் கலெக்டர் அலுவலகத்தையும், குடியிருப்புகளுக்கும் தீ வைத்தனர். மேலும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல் கடைசி நாளில் சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் போராட்டத்திலும் நுழைந்துவிட்டனர். சீருடையில் இருக்கும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.  நடிகர் ரஜினியிடம் , செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். சமூகவிரோதிகள்தான் போரட்டத்திற்கு காரணம் என்று நீங்கள் கூறிய கருத்தை எதிர்கட்சிகள்  எதிர்த்துள்ளனர் அதை பற்றி உங்கள் கருத்து என்று ரஜினியிடம் கேட்டார்.

இதனால் கோவமடைந்த ரஜினி ஒருமையில் செய்தியாளரை பேசிவிட்டு வேறு ஏதும் கேள்விகள் இருகிறதா ?என்று கேட்டார். அதன்பிறகு போராட்டம் போராட்டம் என்று சென்று கொண்டிருந்திருந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.செய்தியாளரின் சாதரண கேள்விக்கு நடிகர் ரஜினி கோபமாக பதிலளித்தது, மற்றும் அவரை ஒருமையில் பேசியது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலைய பேட்டியின் போது, பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசியதாக சங்கங்கள் புகார் தெரிவித்ததையடுத்து  யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை அப்படி புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன் என  ரஜினி கூறியுள்ளார். 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *