கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?


நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? ரஜி

நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ரஜினிகாந்த்தை வேதனைப்படுத்துவதற்காக தான் கேள்வி கேட்கவில்லை என சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம் அளித்துள்ளார். #Rajinikanth #ThoothukudiFiring

தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு நேற்று ஆறுதல் சொல்ல சென்ற ரஜினிக்கு சந்தோஷ்ராஜ் எனும் வாலிபரால் வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது.

21 வயதாகும் அவர் பி.காம் பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இவரும் பங்கேற்றார்.

போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்த சந்தோஷ் ராஜ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மேலும் 46 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ரஜினி சென்றபோது தான் அவரைப் பார்த்து “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று சந்தோஷ்ராஜ் கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினியின் முகம் மாறியது.

என்றாலும் மெல்ல சிரித்தப்படி சமாளித்தப்படி, “நான் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து வருகிறேன்” என்றார். உடனே வாலிபர் சந்தோஷ்ராஜ், “சென்னையில் இருந்து இங்கு வர 100 நாட்கள் ஆகுமா?” என்றார்.

சந்தோஷ்ராஜ் சூடாக கேள்விகள் எழுப்பியதைத் தொடர்ந்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தபடி ரஜினி அங்கிருந்து நகர்ந்து விட்டார். இந்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியது.

சந்தோஷ்ராஜுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கருத்துக்களை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து சந்தோஷ்ராஜ் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கு ரஜினி படங்கள் மிகவும் பிடிக்கும். நானும் ரஜினி ரசிகன்தான். கபாலி படத்தை தியேட்டருக்குள் சீட் கிடைக்காமல் நின்றபடியே பார்த்தவன் நான். அவரைத் தான் நான் என் ஹீரோவாக நினைத்துள்ளேன். அவருக்குத்தான் தமிழகத்தில் மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.

ஸ்டைல் மன்னனான அவரை கமல்ஹாசனுடன் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்டவர் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் ஓட்டு மொத்த ஆதங்கமாகும்.

100 நாட்களுக்கும் மேலாக நாங்கள் ஸ்டெர்லைட்டை மூடக்கோரி போராடினோம். அந்த சமயத்தில் ரஜினி எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் எங்கள் போராட்டம் மேலும் பலமும், வலிமையும் பெற்றிருக்கும். நாங்களும் அவரை புதிய கோணத்தில் பார்த்து இருப்போம்.

ஆனால் நடந்ததெல்லாம் எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. எங்கள் போராட்டத்தை பற்றி அவர் இந்த அளவுக்கு விமர்சித்து பேசுவார் என்று நினைக்கவில்லை. எனவே தான் நான் இதுபற்றி ரஜினியிடம் கேள்வி கேட்க நினைத்தேன்.

எனது கோபம் எல்லாம், எங்களுக்கு தேவைப்படும் போது ரஜினி வரவில்லையே என்பதுதான். அதைத்தான் சற்று மாறுபட்ட விதமாக ரஜினியிடம் நான் கேள்வியாக எழுப்பினேன். ஆனால் எனது கேள்வி மக்கள் மத்தியில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ரஜினியை வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அந்த கேள்வியைக் கேட்கவில்லை. புகழ்பெற்ற ஒருவரை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம்தான் என்னை அப்படி கேள்விக் கேட்க வைத்தது.

நான் ரஜினியிடம் மட்டும் கேள்வி எழுப்பவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜு வந்தபோது கூட நான் ஒரு கேள்வி எழுப்பினேன். “தூத்துக்குடி மக்கள் அனைவரும் பணம் திரட்டி தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியுமா?” என்று கேட்டேன்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போதும் நான் கேள்வி எழுப்பினேன். “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, “ஆம் இருக்கிறது” என்றார். உடனே நான், “அப்படியானால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டேன்.

எனது இந்த கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார். அடுத்தடுத்த படுக்கையில் இருந்தவர்களை சந்தித்த அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னிடம் திரும்பி வந்தார்.

“தம்பி… நீங்கள் கேட்ட கேள்வியை நான் குறித்து வைத்துள்ளேன். நிச்சயமாக எங்களால் முடிந்த நல்லதை செய்வோம்” என்றார்.

என்னிடம் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு வாக்குறுதி அளித்த அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது.

இவ்வாறு சந்தோஷ்ராஜ் கூறினார். #Rajinikanth #ThoothukudiFiring

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *