இது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு

சென்னை:             ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.

இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்ட, 52 வினாடிகள் கொண்ட ஆடியோ ஒன்றை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். ஜெயலலிதா மூச்சுத்திணறலை உணர்ந்தது பற்றி இருமலுடன் அவர் பேசியதாக பதிவாகியுள்ள அந்த ஆடியோவில் வரும் உரையாடல்கள் :-                                ஜெயலலிதா : தியேட்டரில்  முதல் வரிசையில் இருக்கும் ரசிகன் விசிலடிப்பதை போல எனக்கு மூச்சு திணறுகிறது. எனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது?மருத்துவர் அர்ச்சனா : ரத்த அழுத்தம் 140/80-ஆக உள்ளது.ஜெயலலிதா : அது எனக்கு நார்மல் தான்.எதுல ரெக்கார்ட் பண்றிங்க     

                     ஜெயலலிதா : ஆடியோ பதிவு செய்வது சரியாக கேட்கிறதா ? மருத்துவர் சிவக்குமார் : சிறப்பாக இல்லை  மருத்துவர் சிவக்குமார் : சிறப்பாக இல்லை, வி.எல்.சி அப்ளிகேஷன் டவுன்லோட் செய்கிறேன்.ஜெயலலிதா :  எடுக்க  முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள். இதற்காக தான் நான் அப்போவே கூப்பிட்டேன்.  எடுக்க முடியாது என கூறிவிட்டீற்கள். ஒன்னு கெடக்க ஒன்னு செய்கிறீர்கள் .                                                                                                                  இவ்வாறு அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. #jeyalalithadeathprobe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *