கோடை விடுமுறையை முன்னிட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனசூழல் சுற்றுலா

கோடை விடுமுறையை முன்னிட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனசூழல் சுற்றுலா மே மாதம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் 6 வனச்சரகங்களிலும் உள்ள வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அழைத்துச் செல்கின்றனர்.

இதற்கென எஸ்டிஆர்.டிஎன்.ஓஆர்ஜி என்ற இணையத்தளத்திலும் 9750659436 என்ற கைப்பேசி எண்ணிலும் முன்பதிவு செய்யலாம்.

ஒரு நபருக்கு ரூ.500 முதல் ரூ.650 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வேன் அல்லது ஜீப்பில் அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று வனப்பகுதியின் அழகையும் வனவிலங்குகளைப் பார்க்கும் வகையிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. வார இறுதிநாட்களில் மட்டும் நடைபெற்று வந்த இந்த வனச்சுற்றுலா கோடை விடுமுறைக்காலம் என்பதால் மே 31 ம் தேதி வரை எல்லா நாட்களிலும் முன்பதிவு செய்து வனச்சுற்றுலாவில் பங்கேற்கலாம் எனவும்,  வனப்பகுதியில் 20 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செல்வதோடு காலை வேளையில் செல்வோருக்கு சிற்றுண்டியும், மாலை வேளையில் செல்வோருக்கு தின்பண்டங்களுடன் தேநீரும் வழங்கப்படும் எனவும் கூடுதல் தகவல்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் அனைத்து விபரங்களும் உள்ளதாகவும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *