கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?


SV சேகருக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுத் தாக்கல்

SV சேகர் முன் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை சார்பாக எந்த அறிவுறுத்தலும் தரப்படவில்லை என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.    பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தன் முகநூலில் தரக்குறைவாக பதிவிட்டதற்காக அவர் மீது 4 வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்யக் கோரி பத்திரிக்கையாளர்கள் அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி SV சேகர் முன் ஜாமீன் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.இந்நிலையில் முன்ஜாமீன் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் இந்த மனு தொடர்பாக காவல்துறை சார்பாக எந்த அறிவுறுத்தலும் தரப்படவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

ஆனால் இதுதொடர்பாக மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதற்கிடையில் SV சேகருக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் முரளி கிருஷ்ணன் சின்னதுரை, கவின் மலர் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.அவர் மீது பிணையில் வெளியே வர முடியாத IPC 505 (1) c பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில் அதை எதிர்த்து எஸ்.

வீ.சேகர் தனது  மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதில் காவல்துறைத் தரப்பு பதில் முக்கியமானது அதைப் பொறுத்தே அப்பிரிவு நீக்குதல் குறித்து நீதிமன்றம் உத்தரவிடும் .

இந்நிலையில் பதில் தரத் தாமதிக்காமல் காவல்துறை செயல்பட வேண்டும். விரைந்து அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *