கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?


பாரம்பரியம் மற்றும் அழகை மீட்பதற்கு மத்திய அரசு உதவி செய்யும் – நிர்மலா சீதாராமன்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி மறு சீரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது, தேவைபட்டால் மத்திய அரசு உதவிகள் செய்யும்,பாரம்பரியம் மற்றும் அழகை மீட்பதற்கு மத்திய அரசு உதவி செய்யும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை சுவாமி தரிசனம் செய்யப்பட்டது. அப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி மறு சீரமைப்புப் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது, தேவைப்பட்டால் மத்திய அரசு உதவிகள் செய்யும். பாரம்பரியம் மற்றும் அழகை மீட்பதற்கு மத்திய அரசு உதவி செய்யும். இந்தியா முழுவதும் 1427 கிராமங்களில் 6 வகையான வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செய்து வருகின்றன.

இதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் 34 கிராமங்களையும், விருதுநகர் மாவட்டத்தில் 35 கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பணிகளை ஆய்வு செய்தேன். இன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *