பத்திரிக்கையாளர் விசயத்தில் மன்னிப்பு கோரினார் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ மனையில் சிகிச்சை  பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற ரஜினிகாந்த நேற்று தூத்துக்குடி சென்றார்.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ”ஸ்டெர்லைட் போராட்டத்துக்குள் புகுந்தது சமூக விரோதிகள்; ஜல்லிக்கட்டு போல சமூக விரோதிகள் நுழைந்தனர். சமூக விரோதிகள் போலீஸை தாக்கியதால் பிரச்சனை வந்தது என்றார்.

அத்துடன் தமிழக மக்கள் போராட்டம் போராட்டம் நடத்தினா தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” என்று கூறினார். இதனிடையே பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அவர்களின் மனம் புண்படும்படி மிகவும் ஆவேசமாக பேசியதாக சலசலப்பு ஏற்பட்டது.இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில் ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை.

அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *