முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு... பற்றி எரியும் வீடுகளால் பதற்றம்

Tags : Sterlite Protest, Category : TAMIL NEWS,

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதனால் தடியடி நடத்திய போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் ஒருவர் பலியானார். இன்னொருவரும் பலியானதாக செய்திகள் கூறுகின்றன. போலீஸார் குவிப்பு கட்டுக்கடங்காத போராட்டம் போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் குடியிருப்புக்கு தீ குடியிருப்புக்கு தீவைப்பு இந்நிலையில் ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பற்றி எரிந்த வீடுகள் வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு இதனால் குடியிருப்புகள் பற்றி எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தீ வைப்பு சம்பவத்தால் தூத்துக்குடி- நெல்லை 4 வழி சாலையில் கரும்புகை மூட்டம் நிலவி வருகிறது. தீயணைப்புப் படையினர் போராட்டம் தீயணைப்புப் பணி தீவிரம் இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குடியிருப்புகளில் சிக்கியுள்ளவர்களும் வேகமாக மீட்கப்பட்டு வருகின்றனர். சேத விவரம் குறித்து இதுவரை தகவல் இல்லை.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts