தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

By Admin - May 28th, 2018

Tags : Close sterlite factory permanently, GO, Public protest, Sterlite protest, Tamilnadu, Category : Tamil News,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதில் காயமடைந்தவர்களை நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரசாரமாக கூறினர்.இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினனார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts

முன்னாள் அதிமுக அமைச்சரின் மகனின் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தர கணவர் மனு!

  சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் விஜய கிருஷ்ணகுமார்(35). இவர் தனது மனைவியைக் கண்டிபிடித்து தருமாறு கோரி உயர் நீதிமன்ற…

போலீஸ் ட்ரெஸ் போட வெட்கப்படுகிறேன்…. சின்னத்திரை நடிகை நிலானி கைது

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறை உடை அணிந்து காவல்துறைக்கு எதிராக  கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை…

ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு… பற்றி எரியும் வீடுகளால் பதற்றம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள்…

சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்!

எம்.எல்.ஏ கருணாசைத் தொடர்ந்து, சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் நேற்று…

ரஜினியை நோக்கிப் பாயும் சுளீர் கேள்விகள்.. பதில் சொல்வாரா?

சென்னை: போராட்டங்களால் நாடு சுடுகாடாகி விடும் என்று கூறும் ரஜினிகாந்த், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் நகரங்கள் சுடுகாடாகி வருகிறதே…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?