கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?


ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.

துண்டிக்கப்பட்ட இணையதள சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்கள் 47 பேரையும் தனித்தனியாக  சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு நிவாரண தொகை காசோலையையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், துணை முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசாணையைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *