தூத்துக்குடி பக்கம் தலைகாட்ட பயப்படும் அமைச்சர்கள்!

 

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்த்தை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்திய நிலையில், கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் பெரும் போராட்டம் வெடித்தது.

அப்போது மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

இந்த காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இந்த ஈவிரக்கமற்ற துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி பேசிவரும் மத்திய மாநில அரசுகள், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட தயாராக இல்லை. ஸ்டெர்லைட் நச்சு ஆலையின் உரிமையாளர்கள், ‘ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.

பாரதிய ஜனதா கட்சிக்கு ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் மிகப்பெரிய தொகை நன்கொடை அளித்திருப்பதால், ஸ்டெர்லைட் உரிமையாளர்களை பகைத்துக்கொள்ள மத்திய அரசும், அதன் ஜால்ராவாக செயல்படும் மாநில அரசும் தயாராக இல்லை.

இதனால் தென்மாவட்ட மக்கள், மத்திய, மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அப்பாவி இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்வது, இன்டர்நெட்டை முடக்குவது என்று தமிழக அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தென்மாவட்ட இளைஞர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளன.

கோவில்பட்டியை தாண்டி, தென் மாவட்டங்கள் பக்கம் தலைகாட்ட அமைச்சர்கள் பயப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி பக்கம் போனால், மக்களின் கோபம் அமைச்சர்களை விட்டுவைக்காது என்ற உண்மையை அவர்களின் உறவினர்களும், உதவியாளர்களும்கூட உணர்ந்து அமைச்சர்களை எச்சரித்துள்ளனர்.

எனினும் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள, அமைச்சர் உதயகுமார் கூறியதாவது : “தூத்துக்குடியில் அமைதியை ஏற்படுத்தவே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனை அரசே கெடுக்கும் விதமாக இருக்ககூடாது என்பதால்தான் நாங்கள் யாரும் அங்கு செல்லவில்லை.” என்று வினோதமான விளக்கம் கூறியுள்ளார்.

 


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *