மப்டி உடையில் துப்பாக்கிச் சூடு நடத்தும் போலீஸ், திட்டமிட்ட கொலை

தமிழ்நாட்டில் இன்று மிகக் கொடூரமான கருப்பு நாளாக நாளை வரலாற்றில் பதிவாகும் அளவிற்கு இன்றைக்கு
தூத்துக்குடியில் அரங்கேறியுள்ள சம்பவங்கள் அமைந்துள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவி , திருமணம் ஆகி 3 மாதமே ஆண புது மாப்பிளை என 10 க்கும் மேற்படடவர்களை காவல்துறை சுட்டே கொன்றுள்ளது இன்று!
இன்றைய இளைய சமுதாயத்தினர் இது போன்ற ஒரு நிகழ்வை தமிழ்நாட்டில் கேள்விபடுவது இதுவே முதல் முறையாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தெரு நாய், மாடு போன்ற மிருகங்களுக்கு ஒன்று என்றால் வரிந்து கட்டுக் கொண்டு வரும் ஆணையங்கள் இன்றைக்கு எங்கே போனது என்பது தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது.

போராட்டத்தில் சுட்டது பொத்தாம் பொதுவாக அல்ல முக்கிய ஆட்களை குறி வைத்து தான் தூக்கியுள்ளார்கள் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் இருந்து வரும் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் காவல் துறை வாகனத்தில் காக்கி சீருடை அல்லாமல் மஞ்சல் நிர உடை அணிந்திருக்கும் நபர் நன்கு குறி வைத்து சுடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *