மொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றி

மாஸ்கோ: 2018 பிபா உலகக் கோப்பை தொடரின் 3-வது லீக் போட்டியில் மொராக்கோவை 0-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஈரான் வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.

2018 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி
ரஷ்யா மிரட்டலான வெற்றியை பதிவு செய்தது. 2-வது லீக் போட்டியில் இன்று
எகிப்து மற்றும் உருகுவே அணிகள் மோதின. அதில் எகிப்து அணியை வீழ்த்தி 1-0 என்ற கோல்கணக்கில் உருகுவே வெற்றி
பெற்றது.

இந்நிலையில், 3-வது லீக் போட்டியில் மொராக்கோ மற்றும் ஈரான் அணிகள் மோதின. இப்போட்டியில்
கடைசி நேரத்தில் கோல் அடித்த ஈரான் அணி 0-1 என்ற கோல்கணக்கில் த்ரில் வெற்றியை பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டியில் முதன் முறையாக அந்த அணி
வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1998-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி
ஒன்றில் ஈரான் அணி வெற்றி பெற்றிருந்தது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *