கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?


13 வயது மாணவியை பலாத்காரம் செய்து படம் பிடித்த தோழியின் தந்தை

துரைப்பாக்கம்: பனையூரில், மகளுடன் படிக்கும் 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து, அதை படம் எடுத்து மிரட்டி, கடந்த 3 மாதமாக பலாத்காரம்  செய்த காமக்கொடூர தந்தைகள்  இருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை பனையூரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. 8ம்  வகுப்பு படித்து வருகிறார்.  அதே பகுதியில் உள்ள தனது தோழி வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமி  மாலை அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள். பெற்றோர் தங்களது மகளை அழைத்து விசாரித்தபோது, ‘தோழியின் தந்தை மன்சூர் அலிகான் நமது  வீட்டில் அழைத்து சென்று விடுவதாக கூறி, ஆட்டோவில் கடத்திச்சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்’’ என  கூறினார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே கானத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் மன்சூர் அலிகான் (38)  என்பவரை பிடித்து விசாரித்தபோது மகளை தேடி வீட்டுக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்ததும், இதை நேரில் பார்த்த மற்றொரு தோழியின் தந்தை  ரகமதுல்லா (35) என்பவருடன் சேர்ந்து, பலாத்காரம் செய்ததை படம் பிடித்து கடந்த 3 மாதங்களாக  மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததும்  விசாரணையில் தெரியவந்தது. இதை கேட்டதும் போலீசாரே அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காமக்கொடூரர்களான ரகமதுல்லா மற்றும் மன்சூர் அலிகான் ஆகிய இருவரையும்  போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். பெற்ற மகளின் தோழியையே  ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தைகளின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *