பிக் பாஸ் தமிழ் 2: வெளியேறும் முதல் நபர் யார்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருந்து
வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியை
கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இந்த வாரம்
எலிமினேட் ஆகவிருக்கும் போட்டியாளர்கள் யார் என்பதற்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

போட்டியில் இருந்து எலிமினேட் ஆகவிருக்கும் 2  பேரின் பெயரை கன்பெஷன் அறையில் போட்டியாளர்கள் பிக்
பாஸிடம் தெரிவித்தனர். அதில் முதல் பெயர் அனந்த் வைத்தியநாதன். இந்த போட்டிக்கு அவர்
சரியான தேர்வு இல்லை என பார்வையாளர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து வந்த நிலையில் போட்டியாளர்களும்
அதையே கூறியுள்ளனர்.

அடுத்ததாக மும்தாஜை தேர்வு செய்திருக்கின்றனர். முதல் சீசனில்
இருந்த காயத்ரியை போன்று நாட்டாமை போக்குடன் மும்தாஜ் நடந்துக் கொள்வதாக போட்டியாளர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களை தொடர்ந்து ரித்விகா, நித்யா ஆகியோரும் எலிமினேஷன்
பட்டியலில் உள்ளனர். ரித்விகா யாருடனும் பேசாமல் தனியாக இருப்பதாகவும், நித்யா வேலை
செய்யாமல் போக்கு காட்டுவதகாவும் போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் என்பதால் இந்த வாரம்
எலிமினேஷன் இருக்காது என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார். ஆனால், இந்த விஷயம் போட்டியாளர்களுக்கு
தெரியாததால், வீட்டை விட்டு வெளியேறும் அந்த முதல் நபர் யார் என்ற பரபரப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *