தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

30 நாட்கள் இமயமலை செல்லும் ரஜினிகாந்த். 5-ந்தேதி இமயமலை பயணம்

By Admin - June 2nd, 2018

Tags : Kaala, Rajinikanth, Category : Tamil News,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் வெளியானது. அந்த படம் பெரிய வெற்றி அடைந்தது. அதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டது. படத்தை ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரித்து வெளியிடுகிறார்.

கடந்த சில மாதங்களாக ‘காலா’ படப்பிடிப்பு மும்பையிலும், சென்னையிலும் நடந்து முடிந்து இருக்கிறது. வருகிற 7-ந்தேதி ‘காலா’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுப்படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.

ரஜினிகாந்த் அந்த புதுப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் அண்மையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பேசினார்.

அதன்பின்னர், படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக கார்த்திக் சுப்புராஜூம், ஒளிப்பதிவாளர் திருவும் இமயமலைக்கு சென்றனர். சென்னை திரும்பிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நேற்று மீண்டும் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது ‘படப்பிடிப்பு இடமான இமயமலையில் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும்? அங்கு எடுக்கப்படும் காட்சிகள் என்ன?’ என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்திடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
அவரைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.

ரஜினிகாந்தின் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க இருக்கிறார். அதுபற்றி அவர்கள் இருவரும் ஆலோசித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக 5-ந்தேதி சென்னையில் இருந்து இமயமலைக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். 6-ந்தேதி இமயமலை பகுதியில் புது படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 முதல் 30 நாட்கள் வரை ரஜினிகாந்த் அங்கு தங்கி, படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related Posts

Kaala Teaser From Tomorrow

Kaala Teaser From Tomorrow

Chandramukhi Ra Ra singer Binni Krishnakumar 

​Binni Krishnakumar – The songstress of the hit ‘Ra ra’ from #Rajinikanth-starrer Chandramukhi!

Superstar ‪‎Rajinikanth‬’s ‪Kabali‬ Released in 40+ Countries…!

​Superstar ‪#‎Rajinikanth‬’s ‪#‎Kabali‬ Released in 40+ Countries…!

காலாவுக்கு போட்டியாக பிரம்மாண்ட படம்! கடும் சவாலில் ஜெயிக்கப்பபோவது யார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின்…

Superstar Rajinikanth Dhanush recent picture!

Recent pic🌟📸!! #Superstar #Rajinikanth 🕴 & #Dhanush 🚶 alongside with #Manchu Family👬⭕.. #2Point0 #VadaChennai #PowerPaandi…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share