கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ?


ரம்ஜான் சலுகையாக ரூ.786 விலையில் 300 ஜிபி டேட்டா அளிக்கும் பி.எஸ்.என்.எல்!

டெல்லி: 300 ஜிபி டேட்டா வழங்கக் கூடிய பிளானை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரம்ஜானை
முன்னிட்டு பி. எஸ். என். எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு
சலுகை அறிவித்துள்ளது. அதன்படி ரூ. 786 விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா,
அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், 100 எஸ்எம்எஸ் ஆகிய
வசதிகள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும்.

அதாவது மொத்தத்தில்
ரூ. 786 விலையில் பயனர்களுக்கு 300 ஜிபி டேட்டா, 15,000 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் ஆகியவை
வழங்கப்படுகிறது. இந்த சலுகையை ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 26-ம் தேதிக்குள்
ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். முன்னதாக 2018 உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு
தினமும் 4ஜிபி டேட்டா
வழங்கும் சலுகையை பிஎஸ்என்எல் அறவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *