முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

லோன் கேட்டு வந்த விவசாயின் மனைவியை படுக்கைக்கு அழைத்த மத்திய அரசு வங்கி மேலாளர்..!

Tags : NEWS, Category : TAMIL NEWS,

மஹாராஷ்டிராவில் உள்ள புல்தானா நகரில் உள்ள “சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா” வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார் ராஜேஷ் ஹிவாசி.இந்த மாவட்டத்தில், மலாகாபூர் தாலுகாவில், உள்ள டத்தாலா கிராமத்தில், வசித்து வரும் ஒரு பெண், தன் விவசாய நிலத்தில், பயிர் செய்வதற்காக, பயிர்க் கடன் கேட்டு, வங்கியில் விண்ணப்பித்து உள்ளார்.

இது தொடர்பாக, அந்தப் பெண்ணின் மொபைல் போன், முகவரி உள்ளிட்ட விபரங்களைப் பெற்றுக் கொண்ட வங்கி மேலாளர், கடந்த 18-ஆம் தேதி, அந்தப் பெண்ணைப் போனில் தொடர்பு கொண்டார்.பயிர் கடன் வழங்குவதாகவும், அதற்குப் பிரதிபலனாக, அந்தப் பெண்ணைப் படுக்கைக்கு அழைத்தும் ஆபாசமாகப் பேசி உள்ளார். இதைக் கேட்டு, அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின் வங்கியில் வேலை பார்க்கும் பியூன் மனோஜ் சவான் என்பவரை, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைத்து, அந்தப் பெண்ணை, தன்னுடன் படுக்கைக்கு வரச் சம்மதிக்கச் சொல்லச் சொல்லி இருக்கிறார்.அந்தப் பியூனும், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு, அவளது கணவன் இல்லாத சமயமாகச் சென்று, இது தொடர்பாக பேசி இருக்கிறார். அதைக் கேட்டு, ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், போலீசில் புகார் அளித்தார்.போலீசார் கடந்த வியாழக் கிழமை, அந்த வங்கி மேலாளர் மற்றும் பியூன் மீது, வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த வங்கியின் நிர்வாகம், இந்த இருவரையும் சஸ்பெண்ட் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப் படுகிறது.

லோன் கேட்டு வந்த விவசாயின் மனைவியை படுக்கைக்கு அழைத்த மத்திய அரசு வங்கி மேலாளர்..!

https://www.youtube.com/watch?v=wJ_cm3-hXsQ


Share :

Related Posts