டிவி இல்லை…பிக்பாஸ் தேவையே இல்லை: நடிகை கஸ்தூரி அதிரடி

சென்னை: நடிகை
கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை
கஸ்தூரி தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும், திரையுலகம்
குறித்தும் தனது கருத்துக்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். பாலிவுட்
நடிகை சன்னி லியோனை ஸ்ரீதேவியுடன் இணைத்து பேசி சர்சையை கிளப்பினார். இதுதவிர, சமீபத்தில்
‘சாமி-2’ திரைப்படத்தின் டிரெய்லர் தொடர்பாக மறைமுகமாக இவர்
தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

TV ye illa, Thevaiye illa.   #BiggBossTamil2  #idiotbox
https://t. co/gzOHoyj1ZQ—
Kasturi Shankar (@KasthuriShankar) June
18, 2018

இதைத்
தொடர்ந்து, திருநங்கைகள் குறித்து 
டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதனால் கடும் கோபம்
அடைந்த திருநங்கைகள் கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக கஸ்தூரி தனது பதிவுக்காக மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ்
நிகழ்ச்சி பார்ப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “என் வீட்டில் டிவியே
இல்லை. அதனால், பிக்பாஸ் பார்க்க தேவையே இல்லை” என்று
கூறியுள்ளார். இதையடுத்து, கஸ்தூரியின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி
வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *