நல்லவர் யார்?கெட்டவர் யார்?: பிக் பாஸில் ஓரங்கட்டப்படும் நித்யா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மீண்டும் நித்யா
எவிக்‌ஷனுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்கள் டார்கெட் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில்,
நித்யா மீண்டும் டார்கெட் செய்யப்பட்டிருக்கிறார்.

நல்லவர்
யார்?!  கெட்டவர் யார்?!  #பிக்பாஸ்
– தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
pic. twitter. com/7O49tCcOi4—
Vijay Television (@vijaytelevision) June
28, 2018

இது தொடர்பாக வெளியான புரொமோ வீடியோவில், தாடி பாலாஜியின்
மனைவி நித்யாவை மற்ற போட்டியாளர்கள் ஓரங்கட்டுவதும். அதை உணரும்போது வருத்தமளிப்பதாக
நித்யா கூறுகிறார். மனமுடையும் நித்யாவை மும்தா ஆறுதல் கூறி தேற்றுவதும், தனிமைப்படுத்த
விடமாட்டேன் எனவும் ஆதரவு வார்த்தைகளை கூறுகிறார்.

முதல் வார இறுதியிலேயே நித்யா பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்
என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின்றி நேரடியாக இந்த வாரத்துக்கான தலைவராக
நித்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தலைவியாக தனது பொறுப்புகளை முடிப்பதற்கு முன்பாக
அவரை மற்ற போட்டியாளர்கள் ஓரங்கட்டுவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிக்கச்
செய்துள்ளது.

நல்லவர் யார்? கெட்டவர் யார்?: பிக் பாஸில் ஓரங்கட்டப்படும் நித்யா!


https://www.youtube.com/watch?v=MvEFq2oFSNM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *