தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?

By Admin - June 13th, 2018

Tags : BJP, Chennai, Salem, Category : Tamil News,

சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?

# சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள்
# இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி , # சென்னை – #சேலம்
இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார்,
இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,
தமிழ் நாட்டிற்கு # எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத,
# மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க
# பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?
அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம்
அமையவிருக்கும் சாலையானது
# கார்ப்பரேட் நிறுவனமான
# ஜிண்டாலுக்காக .( Jindal steel)
ஆம், # ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக
தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,
#ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை
புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.
அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள
# கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது.
இரண்டாவது # திருவண்ணாமலை மாவட்டம்
# கல்வராயன்மலையில்
இருந்து # இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது,
இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும்
# இரும்புத்தாது வளங்களை
வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால்
#சென்னை துறைமுகத்துக்குகொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின்
ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.
அது தான் இந்த #சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமை சாலை.
இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான
பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும்.
நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது.
இதற்கு # தமிழக அரசும் உடந்தை.
தயவு செய்து # தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்து
கூடுமானவரை # ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள்,
# எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்.

தொடர்ந்து வரும் ஆபத்துகள்?
தப்புமா தமிழகம்! உயிர்வாழ எங்கே செல்வார்கள் தமிழர்கள்?
சேலத்தில் ஏன் விமான நிலையம் இப்போது தொடங்கப்பட்டது. இவையனைத்தும் இந்த பதிவில்…
மூனு மாதத்திற்கு ஒரு செயற்கை கோள் யாருக்காக இஸ்ரோ அனுப்புகிறது?
மிகச்சரியான இடத்தில் எப்படி மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, பிளாட்டினம் திட்டங்கள் தொடங்கபடுகிறது.
இந்தியாவிலேயே ஏன் உலக அளவில் அதிக அளவு பிளாட்டினம் நமது நாமக்கல் மற்றும் கோவை மாவட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல் மாவட்டங்கள் தான் அடுத்த இலக்கு.
குறிப்பாக நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியில் 27 சதுர கிலோமீட்டர் அளவிலும் மேட்டுப்பாளையத்தில் 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பிளாட்டினத்தாதுக்கள் உள்ளதாக…
…இந்திய புவியியல் ஆய்வுத்துறை இஸ்ரோவின் உதவியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து தமிழக கனிம வளத்துறையுடன் (TAMIN) இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டது.
மிகக்குறைவாக 30 மீட்டர் ஆழத்திலேயே தாதுக்கள் அதிக அளவாக கிடைத்த நிலையில், 500 மீட்டர் ஆழத்தில் அதிக அளவிலான பிளாட்டினத்தாதுக்கள்
கிடைப்பது உறுதி என நம்புகிறார்கள்.
இதில் சத்தம்பூண்டியில் கிடைக்கபெற்ற
பிளாட்டினத்தாதுக்கள் 2500 முதல் 2700 மில்லியன் ஆண்டுகள் பழமையான
மதிப்புமிக்கதாகும்
பிளாட்டினத்தாதுக்கள் உள்ள பகுதிகளில் கூடிய விரைவில்
நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.
கொங்கு மண்டலமும் கொலையாக போகிறது
தற்காத்து தப்பி பிழைத்திடு எம் தமிழினமே!
காசுக்கு ஓட்டு போட்டு அழிந்து போகாதே!
கடலுக்குள் போகாதே கச்சதீவை
விற்றுவிட்டோம்
காட்டுக்குள் போகாதே நீயூட்ரினோக்கு விற்றுவிட்டோம்
காவேரிகரைக்கு போகாதே மணலை விற்றுவிட்டோம்
விவசாயம் செய்யாதே ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டோம்
மருத்துவம் படிக்காதே வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டோம்
TNPSC எழுதாதே தமிழே தெரியாதவனுக்கு விற்றுவிட்டோம்
நெல்லைக்கு போகாதே ரஷ்ய அனுஉலைக்கு
விற்றுவிட்டோம்
தூத்துக்குடிக்கு போகாதே ஸ்டெர்லைட்டுக்கு விற்றுவிட்டோம்
ராம்நாடு போகாதே அதானி மின்திட்டத்துக்கு விற்றுவிட்டோம்
தஞ்சாவூர்க்கு போகாதே மீத்தேனுக்கு விற்றுவிட்டோம்
நாகை போகாதே பெட்ரோகெமிக்கலுக்கு விற்றுவிட்டோம்
மலையேற போகாதே க்ரானைட் குவாரிக்கு விற்றுவிட்டோம்
வெள்ளயங்கிரி போகாதே ஜக்கிவாசுதேவ்கு விற்றுவிட்டோம்
சதுரகிரிக்கி போகாதே யாருக்கோ _______ விற்கபோகிறோம்

எந்த கருமத்தையும் கண்டுக்காதே ஏனெனில் உன் வாக்கை நீ விற்றுவிட்டாய்…
நாங்க விலைகொடுத்து வாங்கியதை லாபத்திற்கு விற்றுவிட்டோம்…

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தர்களையென்னி..😢😢😢

சீமான் என் மதத்தை சார்ந்தவனும் இல்லை

நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் எண்ணமுமில்லை.

பிறகு ஏன் சீமானை தீவீரமாக ஆதரிக்கிறேன்?

ஒருவர் செய்த ஊழலை மற்றவர் பட்டியல் போட்டு மேடைகளில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில்

சாதியால் மதத்தால் பிரிந்து கிடக்கும் நம்மை தமிழனாய் ஒன்று சேரச் சொல்லுகிறான்!

மரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

மழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!

ஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!

நீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்!

தூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

விவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

எதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்!

நம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்!

வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்!

எட்டு வழி சாலையால் அதன் பாதிப்புகள்

சேலம் மாவட்டத்தில் இந்த சாலை அமைய உள்ள 38 கிலோமீட்டர் தூரத்தில் பெரும் பகுதி தென்னை மற்றும் பாக்கு மர தோட்டங்கள் உள்ளன

அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 29 கிலோமீட்டர் தூரத்தில் பாதி விவசாய நிலமும் பாதி வனப்பகுதியும் உள்ளன

திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோமீட்டர் தூரத்தில் பெரும் பகுதி வனப்பகுதியே உள்ளன

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிலோமீட்டர் தூரத்தில் பெரும் பகுதி விவசாய நிலங்களையும் வீடுகளாகவும் அமைந்துள்ளது

மேலும் இவ்வழி தடத்தில் 8 மலைகள் உள்ளன அவை ஜருகுமலை அறுநூற்றுமலை சேர்வராயன்மலை சின்னகல்வராயன்மலை பெரியகல்வராயன்மலை சித்தேரிமலை கவுத்திமலை வேதிமலை இந்த மலைகள் அனைத்தும் உடைப்படும் இவ்வளவு வளங்களையும் அழிக்கலாமா ?? என்பதே பொதுமக்களின் கேள்வி

Related Posts

யார் இந்த பினு? -கேரளாவை சேர்ந்தவர் எப்படி தமிழ் நாட்டில், அதிர்ச்சி தகவல்கள்!

கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பினு 1994-ஆம் ஆண்டு 25 வயதில் ரவுடியாக தனது வாழ்க்கையை தொடங்கினான். ஆரம்பத்தில் சிறு,…

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது – சுப்பிரமணிய சுவாமி

சென்னைசென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாரதீயஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது:- “திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான்…

அன்று கையை கட்டிக் காலில் விழுந்தவர் ஓபிஎஸ்: கே.சி.பழனிசாமி

தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி….

முதல்வர் பதவி கிடைக்காத விரக்தி.. ஓபிஎஸ் தற்கொலை… : தினகரன்

தேனியில் ஓபிஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில், முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் தான் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார்…

கர்நாடகத்தில் பாஜக பப்பு வேகவில்லை- நாராயணசாமி

புதுவை: கோவா, மணிப்பூரில் மற்ற கட்சி எம்எல்ஏக்களை மிரட்டி பணிய வைத்து ஆட்சியை பிடித்த பாஜகவால் கர்நாடகத்தில் அவ்வாறு செய்ய…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share