18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங் ! தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை மோசமாக கிண்டல் செய்த பிரபல நடிகை .

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை கிண்டல் செய்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை ,மேலும் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி  தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என கூறியிருந்தார்.                இதனால்,இரு நீதிபதியின் தீர்ப்பும் மாறுபட்டதாக இருப்பதால் 3வதாக நீதிபதி நியமிக்கப்பட்டு இந்த வழக்கில் அவர் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது கருத்துக்களால் எப்பொழுதும் சர்ச்சையை கிளப்பும் நடிகை கஸ்தூரி 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை திருநங்கைகளோடு ஒப்பிட்டு தெரித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி “ அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.. இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்! எனக் குறிப்பிட்டு இரு திருநங்கைகளின்  புகைப்படங்களை இணைத்திருந்தார்.                                         இதற்கு பலரும் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதனால், அந்தப் புகைப்படத்தையும் .பதிவையும் நீக்கிவிட்டார். மேலும், இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்” என பதிவிட்டார்.2/2 இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல  என்று புரிந்தது.

இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்.— Kasturi Shankar (@KasthuriShankar) 14 June 2018 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *