கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?


மது ஆலை இருந்தால் அரசு ஏன் எங்களிடம் மது வாங்க வேண்டும்? டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி

சென்னை,சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த சுயேச்சை உறுப்பினர் டி.டி.வி.தினகரன் (ஆர்.கே.நகர் தொகுதி), தலைமைச்செயலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் துறையை பார்க்கும் அமைச்சரை டாஸ்மாக் அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என்று ஜெயலலிதா அறிவித்தார். அவரது வழியில் நடப்பதாக சொல்லும் இந்த அரசு மே மாதம் 21-ந்தேதி வெளியிட்ட அரசாணை மூலம் 810 மதுக்கடைகளை கூடுதலாக திறக்க முயற்சி செய்கிறது.

என்னை சாராய அதிபர் என்று அமைச்சர் சொல்கிறார். என் குடும்பத்தினருக்கு மது ஆலை எதுவும் கிடையாது. எனது குடும்பம் என்றால், நான், எனது மனைவி, எனது பிள்ளைகள் அடங்கும். எங்கள் குடும்பத்திற்கு மது ஆலை இருக்கிறது என்றால், அரசு ஏன் எங்களிடம் மது வகைகளை வாங்க வேண்டும்.

தேர்தல் கமிஷனில் என்னை அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என்று மனு கொடுத்தது நீங்கள் (அமைச்சர்கள்) தானே. என்னுடைய உறவினர் மது ஆலை வைத்திருந்தால், அது எப்படி எனக்கு சொந்தமாக முடியும்?. கோயம்புத்தூர் பக்கம் சென்று கேட்டுப்பாருங்கள், யார் பினாமி பெயரில் மது ஆலை நடத்துகிறார்கள் என்று தெரியும்.

என் மீதான அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். அதனால், வெளிநடப்பு செய்தேன். சபாநாயகர் நடுநிலையாக செயல்படவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வீட்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 33 அமைச்சர்கள் ரூ.180 கோடி பணம் கொடுத்தனர்.
ஆனால், மதுசூதனனின் ஆட்களை வைத்துக்கொண்டு, நான் தொகுதி பக்கம் செல்லும்போது, 20 ரூபாய் நோட்டை காட்டச்சொல்கிறார்கள். நான் தொகுதி மக்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. கொடுப்பதாகவும் சொல்லவில்லை. அடுத்து தேர்தல் வரும்போது பார்ப்போம். சொந்த தொகுதியிலேயே அமைச்சர் (பி.தங்கமணி) ஜெயிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *