சென்னையில் 5 நாள் வசூலில் மாஸ் காட்டும் ரஜினியின் காலா

பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றாலே அது ரஜினி தான். அவருடைய படம் வந்தாலே வசூலில் வேறொரு புரட்சியை செய்துவிடும். அப்படி பாக்ஸ் ஆபிஸை திணறடிக்க சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான படம் காலா. இப்படம் வசூலில் மட்டுமில்லாது கதை பொறுத்தவரையிலும் அனைவரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. தற்போது இப்படம் சென்னையில் 5 நாள் முடிவில் ரூ. 7. 23 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். தமிழ்நாட்டில் 5 நாட்களில் ரூ. 47. 1 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.