காலா முதல் நாள் வசூல் நிலவரம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைபடம் “காலா”. வெளியான அத்தனை சென்டர்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது.

ஆனால், ரஜினியின் முந்தைய படங்களை விடவும் இந்த படம் மிகவும் குறைந்த எதிர்பார்ப்பிலேயே திரைக்கு வந்தது. இந்நிலையில், உலகம் முழுதும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், சனி, ஞாயிறு கிழமைகளில் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறுகிறார்கள்.

பொதுவாகவே, மாஸ் ஹீரோ என்று பேர் எடுப்பதை காட்டிலும் அந்த பேரை தக்க வைத்துக்கொள்வது என்பது சிரமமான விஷயம். அந்த வகையில், ரஜினிகாந்தின் மாஸ் ஹீரோ இமேஜ் சற்றே சரிந்துள்ளது. காரணம், அவர் இப்போது நடிகர் மட்டுமில்லை, அரசியல் வாதி என்பதாலும், அவரது தூதுக்குடி பேட்டியும் தான் என்று கூறலாம்.

இந்நிலையில், சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்-ல் காலா என்ன செய்துள்ளது. விஜய்யின் மெர்சலை தாண்டியதா..? என்றால் ஆம் தாண்டியது என்று தான் சொல்ல வேண்டும். வெறும் நான்கு லட்சம் ரூபாய் வித்தியாத்தில் மெர்சலை முந்தியுள்ளார் காலா.

Kaala – 1.56cr
Mersal – 1.52cr
Vivegam – 1.21cr
Kabali – 1.12crT
Theri – 1.05cr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *