திருநங்கைகள் குறித்த சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி

சென்னை: திருநங்கைகளை இழிவுப்படுத்தும் வகையில் ட்விட்டரில் புகைப்படம் பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்பு கேட்டார். அரசியல் கருத்துக்களை பேசி வரும் நடிகை கஸ்தூரி சமீபத்தில் வெளியான 18 எம். எல். ஏக்கள் தகுதி நீக்க வழக்கு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திருநங்கைகளை இழிவுப்படுத்தும் வகையில் புகைப்படத்தை பகிர்ந்து கருத்து கூறியிருந்தார். அவரது இந்த செயலுக்கு பலர் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். மேலும், அவர் மீது மதுரை காவல் ஆணையரிடம் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகாரும் அளித்துள்ளனர். இதனையடுத்து திருநங்கைகளை இழிவுப்படுத்திய நடிகை கஸ்தூரியின் வீட்டினை திருநங்கைகள் நேற்று முற்றுகையிட்டனர். மேலும் கஸ்தூரி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வந்தன. இந்நிலையில் திருநங்கைகளை இழிவுப்படுத்தும் நோக்கில் ட்வீட் செய்திருந்த நடிகை கஸ்தூரி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நேற்று முன்தினம் வேடிக்கையாக பேசுவதாக நினைத்து தவறாக ட்வீட் செய்துவிட்டேன். இதனால் என் சகோதர சகோதரிகள் மனது வேதனைபடுகிறது என தெரிந்ததும் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன், பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டும் விட்டேன். சமூகவலைதளங்களிலும் திருநங்கைகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன் என பேசி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *