உலக சாதனையினை நோக்கி களமிறங்கிய விராட் கோஹ்லி!

இந்திய  அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். தற்போதைய வீர்ரகளில்  மூன்று வகை  கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இவர் மட்டுமே. இந்நிலைல்யில் இந்தியா அணி அயர்லாந்துக்கு எதிராக இன்றும், நாளை மறுநாளும் டி20 போட்டிகளில் அந்நாட்டிற்கு சென்று விளையாடுகிறது.

இந்த போட்டியின்போது அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைக்க இருக்கிறார் விராட் கோஹ்லி. மெக்கல்லம் 66 இன்னிங்சிலும், மார்ட்டின் கப்தில் 68 இன்னிங்சிலும் 2000 ரன்களை கடந்துள்ளனர்.

இதுவரை  57 டி20 போட்டிகளில் விராட் கோலி விளையாடியுள்ளார். இதில் 53 இன்னிங்சில் 1983 ரன்கள் எடுத்துள்ள அவர் இன்னும் 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்கள் எடுத்த நான்காவது வீரரும், இந்தியாவின் முதல் வீரரரும் என்ற பெருமையை  பெற இருக்கிறார். கோலிக்கு முன்னர் நியூசிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் கப்தில் 2271 ரன்களும், பிரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்களும், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 1989 ரன்களும் எடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *